விஜய் வாய்ப்புக்காக 4 வருடமாக காத்திருக்கும் தயாரிப்பாளர்.. ஒரு படம் எடுத்துட்டு இவர் படும்பாடு இருக்கே!
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்தான் என தயாரிப்பாளர்கள் முதல் சினிமாவின் மூத்தோர்கள் வரை தொடர்ந்து பலரும் தாங்கள் கொடுக்கும் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஐந்தாறு வருடங்களில் மட்டும் விஜய்யின் சினிமா வளர்ச்சி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார் விஜய்.
இது ஒருபுறமிருக்க கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் வெளியான மெர்சல் படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டவர் தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி.
படம் வாங்கிய, விற்ற அனைவருக்குமே லாபத்தை கொடுத்த மெர்சல் திரைப்படம் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பெருத்த அடியை வழங்கியது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் அட்லீ தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். சரியான திட்டமிடல் இல்லாமல் படப்பிடிப்பை எடுத்து தயாரிப்பாளருக்கு மிகுந்த நஷ்டத்தை கொடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய்யிடம் பேசிய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தளபதி 66 படத்தை தனக்கு தரப்போவதாக கனவு கண்டார். இதுகுறித்து அவரும் கோலிவுட் வட்டாரங்களில் அந்த செய்தியை பரப்பி விட்டார். ஆனால் விஜய் திடீரென தளபதி 66 படத்தை தூக்கி தெலுங்கு நிறுவனத்திற்கு கொடுத்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
இது குறித்து விசாரிக்கையில் இன்னும் சில படங்கள் தள்ளி செய்யலாம் என விஜய் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் தற்போது சின்ன சின்ன பட்ஜெட்டில் சில படங்களைத் தயாரித்து ஓடிடிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளாராம் தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி.