வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அண்ணாத்த படத்தின் டீசர் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் ரஜினி – நயன்தாரா டூயட் பாடியுள்ள சாரா காற்றே என்ற இரண்டாவது சிங்கள் வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அண்ணாத்த டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆம் செம போஸ்டருடன் தற்போது அண்ணாத்த படத்தின் டீசர் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.