சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு, ஆர்யா மற்றும் பா.ரஞ்சித்தை பாராட்டிய கமல் ஹாசன்.. வெளியான புகைப்படங்கள் இதோ..
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
கொரோனா தாக்கம் காரணமாக இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களின் அணைத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த படத்தை பார்த்துவிட்டு, பல திரையுலக நட்சத்திரங்கள் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, உலக நாயகன் கமல் ஹாசன், ஹீரோ ஆர்யா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..