சூர்யாவிற்கு கல்லூரியில் வைத்த பட்டப் பெயர் தெரியுமா? அட இது நம்ம விஜய் பட தலைப்பாச்சே!

 சூர்யாவிற்கு கல்லூரியில் வைத்த பட்டப் பெயர் தெரியுமா? அட இது நம்ம விஜய் பட தலைப்பாச்சே!

நாம்ம வாழ்க்கையில எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நம்ம நண்பர்களுடன் இருக்கும்போது எல்லாத்தையும் மறந்து பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நாம் செய்த குறும்புகளை நினைவு கூர்ந்து அரட்டைகள் அடிப்போம். அதுபோல் நடிகர் சூர்யா சமீபத்தில் தனது நண்பர்களுடன் கல்லூரி நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் கல்லூரியில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறியுள்ளார்.

சென்னை லயாலோ கல்லூரியில் ஏராளமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோர் லயோலா கல்லூரியில் படித்தவர்கள் தான். சமீபத்தில் லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு இணையம் வழியாக நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகர் சூர்யா தன்னுடைய பசுமையான கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய கல்லூரி காலம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை சூர்யா பகிர்ந்து கொண்ட காணொலி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

கல்லூரி காலங்களில் சூர்யாவிற்கு பெரிதாக மேடையில் பேசி பழக்கம் இல்லையாம். ஆனால் முதன் முறையாக கல்லூரியில் ஒரு நிகழ்வின் போது அவரை அறிமுகப்படுத்திக் கொள்ள கூறியுள்ளார்கள். அப்போது பதற்றத்தில் சூர்யா, என் பெயர் சரவணன், நான் டூகாம் படிக்கிறேன் என கூறிவிட்டார்.

suriya-cinemapettai

அன்றிலிருந்து சில நாட்கள் நண்பர்கள் அவரை ‘ஏய் டூகாம்’ என்று தான் அழைத்து வந்தார்களாம். அதேபோல் சூர்யாவிற்கு கல்லூரி நாட்களில் பாடத் தெரியாதாம். ஆனால் பாடலுக்கு சூப்பராக விசில் அடிப்பாராம். அவர் விசில் சத்தம் படு பயங்கரமாக கேட்குமாம்.

அதனால் அவருடைய நண்பர்கள் பிகில் என பட்டப்பெயர் வைத்து அழைப்பார்களாம். இவ்வாறு கல்லூரியில் தனது நண்பர்கள் தனக்கு வைத்த பட்ட பெயர் குறித்து சூர்யா மனம் விட்டு பேசி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

admin

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *